சந்திராயன் - 2 வெற்றிக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திரமோடி தமது டுவிட்டர் வலைப்பதிவில் விண்ணில் செலுத்தப்பட்ட சிறப்பான இந்த தருணம் நமது மகிமைக்குரிய வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார்.

Update: 2019-07-22 18:04 GMT
சந்திரயான் - 2 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ,பிரதமர் நரேந்திரமோடி தமது டுவிட்டர் வலைப்பதிவில், விண்ணில் செலுத்தப்பட்ட சிறப்பான இந்த தருணம்,  நமது மகிமைக்குரிய வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார். இதன்மூலம் நமது விஞ்ஞானிகளின் ஆற்றலும், அறிவியல் யுகத்தின் முன்னேற்றத்தை அடைய துடிக்கும் 130 கோடி இந்தியர்கள் ஊக்கமும் வெளிப்பட்டு உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி, தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்