உ.பி.யில் 10 பேர் கொல்லப்பட்ட விவகாரம் - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரியங்கா காந்தி

உத்தரபிரதேசத்தில் நிலத்தகராறில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை இன்று சந்தித்த பிரியங்கா அவர்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2019-07-20 10:53 GMT
உத்தரபிரதேசத்தில் நிலத்தகராறில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை இன்று சந்தித்த பிரியங்கா, அவர்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். சோன்பத்ராவில் நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் 10 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் சுனார் என்ற பகுதிக்கு சென்ற பிரியங்கா பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். 

பிரியங்கா காந்தியை கைது செய்ததற்கு கண்டனம் 



உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்லாவரம் பேருந்து நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்