நாட்டின் வருமானத்தை பெருக்க ஏற்றுமதியில் கவனம் செலுத்துங்கள் - நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதில், மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-06-15 18:26 GMT
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் தெலுங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் தவிர, மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்பதே இலக்கு என்றார். நாட்டின் வருமான  வாய்ப்பை பெருக்க ஏற்றுமதி அவசியம் என்றும் மாநில அரசுகள் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜல் சக்தி என்கிற அமைச்சகம் தண்ணீர் தொடர்பான ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க உதவி புரியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்