பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் : காங்கிரஸ் கண்டனம்

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது.

Update: 2019-04-19 12:02 GMT
பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 16ஆம் தேதி ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் பிரசாரம் செய்ய சென்றார். அப்போது ஒடிசா மாநில தேர்தல் பார்வையாளர் முகமது மொசின், ஹெலிகாப்டரை சோதனையிட்டார். இந்நிலையில், கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் உள்ளவர்கள் தொடர்பாக ஆணையம் பிறப்பித்த வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்பட்டதாக, முகமது மொசின் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடமையை செய்த அதிகாரியை இடைநீக்கம் செய்து, பாரபட்சமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்