ஏழுமலையான் கோவிலில் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை கோவிலின் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.;

Update: 2019-04-17 11:18 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 16ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை கோவிலின் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கோடை காலத்தை ஒட்டி திருப்பதியில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு வசதி, குடிநீர் வசதி, நிழல் பந்தல், குளுக்கோஸ் என பல்வேறு வசதிகள் குறித்தும் அவர் விவரித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்