பத்மநாபபுரம் அரண்மனை மீண்டும் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனை புத்தம் புதிய பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-21 12:44 GMT
கேரளா மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு தலை நகராக விளங்கிய கல்குளம் பத்மநாபபுரத்தில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனை கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் இணைந்த பிறகு கேரளா அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.  இந்நிலையில் அரண்மனையை புதுப்பிக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்நிலையில்,  பத்மநாபபுரம் அரண்மனையை கேரளா தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன்திறந்து வைத்தார், 200 ஆண்டுகள் பழமையான கடிகாரமும், பழுதுபார்க்கப்பட்டதால், மீண்டும் இயங்கியது. புத்தம் புதிய பொழிவுடன் உள்ள அரண்மனையை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்