"மாநிலத்தின் வளர்ச்சியில் காங்கிரஸ் கட்சிக்கு அக்கறையில்லை" - பிரதமர் மோடி

ராகுல்காந்திக்கு இந்து மதம் பற்றிய அடிப்படையே தெரியாது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

Update: 2018-12-03 14:09 GMT
வரும் 7-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவர் இவ்வாறு தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில், பாஜக அரசு ஆற்றிய மக்கள் நலப் பணிகளை பட்டியலிட்ட பிரதமர், காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும், மாநில வளர்ச்சியில் எந்த அக்கறையையும் காட்டவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் கட்சியால், தங்களை வெல்ல முடியாது என கூறிய பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு இந்து மதம் பற்றிய  அடிப்படையே தெரியாது எனவும் விமர்சித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்