ராமர் கோயிலுக்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உத்தவ் தாக்கரே கேள்வி

அயோத்தி சென்றுள்ள சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, ராமர் கோயில் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகளை ஆராய்ந்து வருவதாக கூறிய மத்திய அரசு, கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை தீர்வுகளை ஆராய்ந்தது என கேள்வி எழுப்பினார்.

Update: 2018-11-25 17:28 GMT
இதே கோரிக்கையை வலியுறுத்தி அயோத்தி சென்றுள்ள சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, ராமர் கோயில் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகளை ஆராய்ந்து வருவதாக கூறிய மத்திய அரசு, கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை தீர்வுகளை ஆராய்ந்தது என கேள்வி எழுப்பினார். எதிர்வரும் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவசர சட்டம் இயற்றி ராமர் கோயிலை உடனடியாக கட்ட வேண்டும் எனவும் உத்தவ் வலியுறுத்தினார். அயோத்தியில் ராமர் கோயிலை காண இன்னும் எத்தனை காலம் தான் காத்திருப்பது என கேள்வி எழுப்பிய உத்தவ் தாக்கரே, இந்துக்கள் இனியும் பொறுமை காக்க மாட்டார்கள் என எச்சரித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்