சைக்கிள் ஓட்டிச் சென்றவரிடம் 'ஓவர் ஸ்பீடு' எனக் கூறி ரூ.2,000 அபராதம் வசூலித்த போலீஸ்...

திருவனந்தபுரத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்ற இளைஞரை வழி மறுத்த காவல்துறையினர், 'ஓவர் ஸ்பீடு' எனக் கூறி, 2000 ரூபாய் வசூலித்துள்ளனர்.

Update: 2018-10-09 16:13 GMT
திருவனந்தபுரத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்ற  இளைஞரை வழி மறுத்த காவல்துறையினர், 'ஓவர் ஸ்பீடு' எனக் கூறி, 2000 ரூபாய் வசூலித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காசிம் என்பவர், கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். சைக்கிளில் சென்ற இவரை வழிமறித்த கும்பாலா பகுதி காவல்துறையினர், அதிக வேகம் மற்றும் ஹெல்மெட் இல்லை எனக் கூறி, 2 ஆயிரம் ரூபாய் வசூலித்துவிட்டு, 500 ரூபாய்க்கான ரசீது கொடுத்துள்ளனர். கூலி வேலை செய்யும் காசிம், ஐந்து நாள் சம்பளத்தை இழந்த வருத்தத்தை முகநூலில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பரவியதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கும்பாலா பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்