தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 2வது முறை சிகிச்சை பெற ஆதார் கட்டாயம்

தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இரண்டாவது முறை சிகிச்சை பெற ஆதார் எண் கட்டாயம் என்று தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2018-10-08 05:51 GMT
தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இரண்டாவது முறை சிகிச்சை பெற ஆதார் எண் கட்டாயம் என்று தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில், பயனாளிகள் அளிக்க 
வேண்டிய அடையாள ஆவணங்கள் குறித்து தேசிய சுகாதார அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி இந்து பூஷண் கூறும்போது, ஆதார் அட்டை குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் முழுமையாக படித்து புரிந்து கொண்டுள்ளோம் என்றும், அதன்படி, தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஒருவர் முதல்முறை சிகிச்சை பெறும்போது எந்த ஒரு அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்து இலவச சிகிச்சை பெற முடியும் என்று கூறியுள்ளார். ஆனால், அதே நபர் இரண்டாவது முறை சிகிச்சை பெறும்போது கண்டிப்பாக ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும். ஆதார் எண் பெறவில்லை என்றால், அதற்காக விண்ணபித்து இருப்பதற்காக தரப்படும் ஆவணத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்