கணவனை கொன்ற மனைவி : ஒருமணிநேரத்தில் கண்டுபிடித்த போலீஸ் மோப்ப நாய் 'மேகி'

ஆந்திராவில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த வழக்கில், போலீஸ் மோப்ப நாயின் உதவியால் ஒருமணிநேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-09-15 19:05 GMT
சித்தூரை அடுத்த தமணப்பள்ளி அருகே மாந்தோப்பில் இந்த கொலை நடந்துள்ளது. அங்கு கொண்டு வரப்பட்ட போலீஸ் மோப்ப நாய் மேகி, மோப்பமிட படி சம்பவ இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் வாசலில் நின்றுள்ளது. வீட்டின் உரிமையாளர் வீரபத்திர ரெட்டியிடம் போலீசார் விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட முகில் ரெட்டியின் மனைவி மமதாவுக்கும், தமக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக கூறியுள்ளார். இதற்கு இடையூறாக இருந்ததால், முகில் ரெட்டியை, மமதாவுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கை கண்டுபிடிக்க உதவிய மோப்பநாய் மேகிக்கு,  பேண்ட வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பதக்கம் வழங்கப்பட்டது. நாயின் காப்பாளருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்