தூத்துக்குடியை தொடர்ந்து திருவள்ளூரிலும் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி

Update: 2025-12-25 22:57 GMT

தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதாவை தொடர்ந்து, திருவள்ளூரில் தவெக நிர்வாகி ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பூண்டியை அடுத்த திருப்பாச்சூரைச் சேர்ந்த சத்திய நாராயணன், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து பேனர் வைத்துள்ளார். அதில், கட்சியின் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் படம் விடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த விஜய் பிரபு மிரட்டியதால் மனமுடைந்த சத்திய நாராயணன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்