"பெட்ரோல் - டீசல் விலை உயர்வு ஏன்? - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

அமெரிக்காவின் தவறான கொள்கை காரணமாக சர்வதேச சந்தையில், பெட்ரோலிய பொருட்களின் விலை கூடி வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-01 17:05 GMT
அமெரிக்காவின் தவறான கொள்கை காரணமாக சர்வதேச சந்தையில், பெட்ரோலிய பொருட்களின் விலை கூடி வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவின் நடவடிக்கையா, சர்வதேச அளவில் டாலருக்கு எதிரான உலக நாடுகளின் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது என்றார். இந்திய ரூபாயின் மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்த தர்மேந்திர பிரதான்,  இதனால் தான் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருகிறது என்று கூறினார்.  

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் ரூபாய் நோட்டு வீழ்ச்சி காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்