ஓராண்டில் 207 முறை பெட்ரோல் விலை உயர்வு - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஓராண்டில் 207 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2018-07-18 15:11 GMT
தினசரி விலை நிர்ணய அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இந்நிலையில், விலை உயர்வு குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசு ஒரு அறிக்கை அளித்துள்ளது. 

அதில், 2017ம் ஆண்டு ஜூன் 16 முதல் 2018ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி வரை ஓராண்டில் 207 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதாகவும் அந்த காலகட்டத்தில் 107 முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோல,  டீசல் விலையில் 212 முறை உயர்த்தப்பட்டதாகவும் 93 முறை குறைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் 279 ஏ 5வது பிரிவின்படி, ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்