தூத்துக்குடி - பெங்களூரு நேரடி விமான சேவை
பதிவு: ஜூலை 01, 2018, 09:58 PM
தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூருவில் பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட முதல் விமானம் மாலை 4.20 மணிக்கு தூத்துக்குடி வந்தடைந்தது. விமானத்தில் மொத்தம் 66 பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடினர்.