ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் முடிந்து ஒரு மாதமாகியும் அச்சத்தோடு வாழும் மக்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் முடிந்து ஒரு மாதமாகியும் அச்சத்தோடு வாழ்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

Update: 2018-06-23 05:28 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் முடிந்து ஒரு மாதமாகியும் அச்சத்தோடு வாழ்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு  எதிராக கடந்த மே மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், குமரெட்டியாபுரம் , மடத்தூர், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி  இளைஞர்களை இரவு நேரங்களில் போலீசார் கைது செய்து வருவதாகவும் இதனால் வீடுகளை பூட்டிவிட்டு கோயில்களில் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட்  போராட்டம் முடிந்து ஒரு மாதம் கடந்தும்  அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கிராமக்கள் தெரிவிக்கின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்