நம் வாசல் தேடி வரும் புத்தகங்கள்...

புத்தகங்களுக்காக நூலகத்தைத் தேடி நாம் செல்லும் காலம் போய், புத்தகங்களே நம் வாசல் தேடி வருகிறது. நாம் படிக்க விரும்பும் புத்தகங்களை வீடு தேடி வந்து தருகிறார் சென்னையை சேர்ந்த ஒருவர்.;

Update: 2018-06-22 07:54 GMT
நம் வாசல் தேடி வரும் புத்தகங்கள்...

இன்றைய இயந்திர உலகில் நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து காணப்படுகிறது. 



புத்தக வாசிப்பாளர்களுக்காக, www.readersclub.co.in தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ள இவர், இணையதளத்தில் பதிவு செய்து, தேவையான புத்தகத்தை  தேர்ந்தெடுத்து, வாசிப்பாளர்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அனுப்பினால் போதும். அடுத்த இரு நாட்களுக்குள், வீடு தேடி புத்தகம் வரும்.  வாசித்து முடித்ததும், வீடு தேடி வந்து   சேதுராமன் பெற்றுக் கொள்வார். போன் கால் மூலமும் புத்தகங்களை  ஆர்டர் செய்யலாம். சந்தாதாரர்களிடம் ஆண்டுக்கு வெறும் 250 ரூபாய் மட்டும் வசூலிக்கிறார்.



பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக சுமார் 15000 புத்தகங்கள் இவருடைய நூலகத்தில் உள்ளன. இன்றைய மாணவர்களுக்கு புத்தகங்களின் அருமையை  உணரச் செய்ய மாணவர்களின் வீடுகளுக்கும் சென்று புத்தகங்களை வழங்குகிறார். 



புத்தகங்கள் மீது தீராத காதல் கொண்டிருக்கும் சேதுராமன் வருங்காலத்தில் பல்வேறு தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்து  அவற்றை மக்களுக்கு வினியோகம் செய்து, வாசிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருக்கிறார்.


Tags:    

மேலும் செய்திகள்