'டிமான்ட்டி காலனி' பட இயக்குநர் பாலிவுட்டில் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அருள் நிதி நடிப்பில் ஹாரர் த்ரில்லர் ஜானரில் 2015ம் ஆண்டு வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற படம் 'டிமான்ட்டி காலனி'. இப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, தற்போது 2ம் பாகத்தையும் எடுத்து முடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில், பாலிவுட்டில் அஜய் தேவ்கனை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது...