கேஜிஎஃப்-2' படத்தை பார்த்து ரசித்த கமல்ஹாசன், இளையராஜா

ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வரும் கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் இணைந்து பார்த்து ரசித்தனர்.

Update: 2022-04-29 08:48 GMT
ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வரும் கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் இணைந்து பார்த்து ரசித்தனர். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னை திருமங்கலத்தில் உள்ள திரையரங்கில், கமல்ஹாசன் மற்றும் இளையராஜா ஆகியோர் பார்த்து ரசித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்