குயின் இணையதள தொடருக்கு தடைகோரி மனு : உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அவகாசம்

குயின் இணையதள தொடருக்கு தடை கோரிய மனுவுக்கு பதில் அளிக்க 4 வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-16 12:49 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை  அடிப்படையாக கொண்டு குயின் என்ற இணையதள தொடர் அண்மையில் வெளியானது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவது விதிகளை மீறுவதாகும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தடை செய்யப்பட்டதை போல, குயின் தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் வாதிட்டார். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம்,  படத்தை பார்த்த பிறகே முடிவு செய்ய முடியும் என்பதால், நான்கு வார காலம் அவகாசம் கோரியது. இந்த தொடர்,  உண்மை சம்பவங்களை தழுவிய  கற்பனை கதை என தொடரின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்