நடிகர் வினுசக்கரவர்த்தி பிறந்த நாள் இன்று.

தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களை கடந்த வினு சக்கரவர்த்தியின் பிறந்த நாளான இன்று அவரை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...

Update: 2019-12-15 05:04 GMT
உசிலம்பட்டியில் பிறந்த வினுசக்கரவர்த்தி, அடிப்படையில் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். அதனால் தானா என்னவோ,, போலீஸ் வேடத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தினார். அவரது கணீர் குரலிலும் கூட அதே கம்பீரம்..

போலீஸ் வேடத்தில் வசனம் 

ரயில்வேயிலும் சில ஆண்டு பணியாற்றிய அவர், கதாசிரியராகத்தான் சினிமாவில் நுழைந்தார். 1977ல் கன்னட படம் ஒன்றில் சிறிய வேடத்தில் அறிமுகமான வினுசக்கரவர்த்தியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது, கோபுரங்கள் சாய்வதில்லை படம்..

கோபுரங்கள் சாய்வதில்லை... 

கிட்டத்தட்ட 35 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் அங்கமாக நீடித்த, வினுசக்கரவர்த்தி, வில்லன், காமெடி, குணசித்திரம் என முன்னணி ஹீரோக்களுடன் கலக்கியவர். 

எங்க ஊரு பாட்டுக்காரன்... ராமராஜனுடன்  குணச்சித்திரம்

ராஜாதி ராஜா... ரஜினியுடன் காமெடி...

உனக்காக எல்லாம் உனக்காக... 
லக்கி மேன்..  கார்த்திக் படத்தில் செந்தில், கவுண்டமணி காமெடி... 

தமிழ் திரையுலகின் நிரந்தர கனவு கன்னியான சில்க் ஸ்மிதாவை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையும், இவரையே சேரும். தமிழ் சினிமாவின் இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பார்த்தவர் வினுசக்கரவர்த்தி.

அருள் படத்தில் வடிவேலு உடன் காமெடி... எடுபட்ட பண்ணி டயலாக்... 

தேசிங்கு ராஜா...  கிளைமாக்ஸ் டான்ஸ்

தமிழில் ஆயிரம் படங்களை கடந்த ஒரு சில நடிகர்களில் வினு சக்கரவர்த்தியும் ஒருவர். 2007ம் ஆண்டு வெளியான 'முனி' இவரது ஆயிரமாவது படம்...

2014ம் ஆண்டு 'வாயை மூடி பேசவும்' படம் வரையிலும் இடைவிடாமல் நடித்து மறைந்த வினுசக்கரவர்த்தியின் நடிப்பை தமிழ் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது..
Tags:    

மேலும் செய்திகள்