விமான நிலையத்தில் நடிகை தீபிகா படுகோனேவின் ஆட்டம்..!

நடிகை தீபிகா படுகோனே பொது இடத்தில் நடனமாடிய காட்சி சமூக வலை தளத்தில் பரவி வருகிறது

Update: 2019-12-07 07:02 GMT
இப்படி அழகா நளினமா தீபிகா படுகோன் சினிமாவுல டான்ஸ் ஆடினாலே க்ரவுடு அள்ளும். நேர்ல, அதுவும் மும்பை ஏர்ஃபோர்ட் வாசல்ல அவங்க டான்ஸப் போட்டா என்னாகும்? இது நிஜமாவே தீபிகாதானா இல்ல அவங்களை மாதிரியே இருக்குற டிக்டாக் பிரபலமா? அப்படீன்னு கேட்டுத்தான் முதல்ல இந்த வீடியோ ஷேர் பண்ணப்பட்டுச்சு. ஆனா இது நிஜமாவே தீபிகாதான். கூட ஆடுறது பாலிவுட் நடிகர் Kartik Aryanதான். அவரு இவங்களுக்கு ஸ்டெப்பு சொல்லித்தர்றதும் இவங்க ஆடுறதும்னு ஒரே கண்கொள்ளா காட்சிதான். சும்மா ஒரு நிமிஷம் ரெண்டு நிமிஷம் இல்ல... மொத்தமா 10 நிமிஷம் இந்த டான்ஸ் தொடர்ந்திருக்கு. ஏர்போர்ட்ல இருந்த கார்ட்ஸ் எல்லாரும் இவங்களுக்கு ஆடியன்ஸ் ஆகிட்டாங்க. சே... இருந்தாலும் நம்ம தீபிகா எவ்வளவு எளிமையா இருக்காங்கல்லனு இந்த வீடியோவைப் பார்த்து பலபேரு பாராட்டிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் சில பேரு, இதெல்லாம் பப்ளிசிட்டிக்காக பண்ற பப்ளிக் நியூசென்ஸ். ஏர்ஃபோர்ட் வாசல்ல இப்படியெல்லாம் பண்ண இவங்க பர்மிஷன் வாங்கியிருக்காங்களா அப்படீன்னு கழுவி கழுவி ஊத்துறாங்க. 


Tags:    

மேலும் செய்திகள்