தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விருப்பப்பட்டால் அவரது பிரசார பயண திட்டத்தை வகுத்து கொடுப்பேன் என்று அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தில் நடைபெற்று வரும் முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் நிகழ்ச்சியை விட கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.