அசுரன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் - நடிகர் தனுஷ் வெளியிட்டார்

அசுரன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

Update: 2019-08-23 02:42 GMT
அசுரன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை  நடிகர் தனுஷ் வெளியிட்டார். வடசென்னை' படத்தைத் தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் " அசுரன் " . நாவலாசிரியர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் 'அசுரன்' படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த நிலையில்  இரண்டாவது போஸ்டரை நடிகர் தனுஷ்  வெளியிட்டுள்ளார். படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பும் படக்குழுவினரிடமிருந்து வந்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்