சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம்

நடிகர்கள் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் உருவாக உள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் நார்தன் இயக்குகிறார்.

Update: 2019-04-22 05:09 GMT
நடிகர்கள் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் உருவாக உள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் நார்தன் இயக்குகிறார். இவர், கே.ஜி.எப். படம் மூலம் பிரபலமான பிரசாந்த் நீலிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். நவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இது, பெரிய பட்ஜெட் படமாக உருவாகிறது.
Tags:    

மேலும் செய்திகள்