எனக்கான ஒருவரை சந்தித்தால் உடனே திருமணம் :திரிஷா

திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று, தகவல் பரவியது

Update: 2019-03-22 05:31 GMT
தமக்கான சரியான ஒருவரை சந்தித்து விட்டால், உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக, நடிகை திரிஷா கூறியுள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்பே திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று, தகவல் பரவியது. பின்னர், தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.ஆனால், அந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. இந்நிலையில், தாம் யாரையும் காதலிக்கவில்லை என்றும், சரியான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக, அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்