மிஸ்டர்லோக்கல் படக்குழுவினருக்கு வாட்ச் பரிசளித்த நயன்தாரா

மிஸ்டர்லோக்கல் படப்பிடிப்பை முடித்த நயன்தாரா படக்குழுவினருக்கு வாட்ச்சை பரிசாக அளித்துள்ளார்.

Update: 2019-02-10 05:04 GMT
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார்.காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், நயன்தாராவின் படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பின் போது நயன்தாரா, படக்குழுவினருக்கு வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைக்கும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்