படமாகிறது, 'இஸ்ரோ' விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை : விஞ்ஞானி வேடத்தில் நடிக்கிறார், நடிகர் மாதவன்

இஸ்ரோ' விஞ்ஞானியான நம்பி நாரயணனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

Update: 2018-09-26 07:23 GMT
* 'இஸ்ரோ' விஞ்ஞானியான நம்பி நாரயணனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதில்,  நடிகர் மாதவன் நடிக்கவுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன், இந்திய ரகசியங்களை வெளிநாட்டிற்கு தெரிவித்ததாக கூறி, கைது செய்யப்பட்டு, 24 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். 

* இந்த வழக்கை மையமாக கொண்டு தயாராகவுள்ள திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார்.  "ராக்கட்ரி" என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் தனது கதை இருக்கும் என நம்பி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்