விளையாட்டு திருவிழா - (10.10.2018) - காலை இழந்தும் மனம் தளராத ராணுவ வீரர்
பதிவு : அக்டோபர் 10, 2018, 08:39 PM
விளையாட்டு திருவிழா - (10.10.2018) - பெண்களை ஈர்க்கும் "ஆக்வா ஜூம்பா" உடற்பயிற்சி
விளையாட்டு திருவிழா - (10.10.2018) 

காலை இழந்தும் மனம் தளராத ராணுவ வீரர் 

ஆனந்தன் குணசேகரன்...தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்.. பள்ளிப் பருவத்தில் கார்கில் போர் நடந்த தருணத்தில், தாமும் ராணுவ வீரராக வேண்டும் என்ற கனவில் இருந்தார். கடந்த 2005ஆம் ஆண்டு பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி ராணுவத்தில் சேர்ந்தார் குணசேகரன்.ராணுவத்தில் சேர்ந்து மூன்றே ஆண்டுகளில் காஷ்மீரில் பணிபுரியும் போது எதிர்பாராத விதமாக கன்னி வெடியை மிதித்து தனது கால்களை குணசேகரன் இழந்தார். கால்கள் போய்விட்டதால் வாழ்க்கையும் போய்விட்டது என்று எண்ணாமல் குணசேகரன் நாட்டிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற வெறியில் இருந்தார். அப்போது அவருக்கு கைக் கொடுத்த இந்திய ராணுவம் செயற்கை கால்களை பொருத்த உதவி செய்தது. செயற்கை கால்களுடன் நடக்கவே சிரமப்பட்ட குணசேகரன் நாட்டிற்காக சாதிக்க வேண்டும் என்ற வெறியால் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடிவு எடுத்தார்.குணசேகரனால் நடக்கவே முடியாது என்று அனைவரும் நினைத்த போது குணசேகரன் தனது விடா முயற்சியால் ஓட ஆரம்பித்தார். ராணுவ மையத்தில் கிடைத்த பயிற்சியால், மண்டல் அளவில் தேசிய அளவில் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார் குணசேகரன் ரியோ பாராலிம்பிக் போட்டியில் குணசேகரன் பங்கேற்று, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்தார். ஆனால் பதக்கம் வெல்ல முடியவில்லை. இருந்தும் மனம் தளராத குணசேகரன் கடும் பயிற்சியை மேற்கொண்டு 2017ஆம் ஆண்டு துபாயில் நடத்த உலக பாரா கிராண்ட் பிரீ தடகள தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.தனது 30வது வயதில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய தடகள போட்டியில் வெண்கலம் வென்றார் குணசேகரன்.. வாழ்க்கை நம்மை முடக்கி போட நினைத்தாலும் ஒரு கை பார்க்க வேண்டும் என்பதே குணசேகரன்..


இளையோர் ஒலிம்பிக் போட்டி - நீச்சல் பந்தயத்தில் ரஷ்யாவுக்கு 2 தங்கம்
இளையோர் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 100 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் ரஷ்ய வீரர் மினாகோவ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 200 மீட்டர் BACK STROKE நீச்சல் பிரிவில் மால்டோவா வீராங்கைனை டைட்டோனா வெற்றி பெற்றார். இதே போன்று மகளிருக்கான 100 மீட்டர் FREESTYLE நீச்சல் பந்தயத்தில் செக்குடியரசு வீராங்கனை பார்போரா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆடவருக்கான ரிலே நிச்சல் பந்தயத்தில் ரஷ்ய அணி தங்கம் வென்றது.

கத்திச்சண்டை- ஹங்கேரி வீரங்கனைக்கு தங்கம்
மகளிருக்கான கத்திச்சண்டை போட்டியில் மெக்சிகோ வீராங்கனையை வீழ்த்தி ஹங்கேரி வீராங்கனை தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஷாங்காய் மாஷ்டர்ஸ் டென்னிஸ்- 3வது சுற்றுக்கு ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ் வெற்றி
ஷாங்காய் மாஷ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றுக்கு ஜெர்மனியின் நட்சத்திர இளம் வீரர் அவெக்ஸ்சண்டர் ஸ்வெரேவ் முன்னேறியுள்ளார். ஜார்ஜிய வீரர் நிக்கோலஷை எதிர்கொண்ட அவர் 7க்கு5, 6க்கு4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதே போன்று மூன்றாவது சுற்றுக்கு நட்சத்திர வீரர் மார்டின் டெல் போட்ரோ தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸ் வீரர் காஸ்கெட்டை எதிர்கொண்ட அவர் போராடி தோல்வியை தழுவினார். 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் - ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராடி வருகிறது. வெற்றிக்கு 462 ரன்களை பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. முன்னணி வீரர்கள் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. 

பெண்களை ஈர்க்கும் "ஆக்வா ஜூம்பா" உடற்பயிற்சி
AQUA ZUMBA.. பெண்கள், குழந்தைகளை ஈர்க்கும் புதிய உடற்பயிற்சி முறை தான் இந்த AQUA ZUMBA. தரையில் ஆடும்  ஜூம்பா நடனத்தை, தண்ணீரில் ஜாலியாக ஆடி பாடுவது தான் இதன் சிறப்பம்சமே. தண்ணீரில் கை, கால்களை அசைப்பதே சற்று கடினம்.. ஆனால் எப்படி நடனமாடுவது என்று நீங்கள் கேட்கலாம்.?  நீச்சல் குளத்திற்கு வெளியே நிற்கும் பயிற்சியாளர், துள்ளல் போடும் இசைக்கு ஏற்ப நடனமாடுவார். அதனை தண்ணீரில் நிற்பவர்கள் ஆட முயற்சி செய்தாலே போதும். புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுவது தான் இந்த பயிற்சி. இதனை மேற்கொள்வதால், மன அழுத்தம் குறைவதுடன்,உடல் எடையும் குறைந்து, உடல் வழுவை மேம்படுத்தும். தண்ணீர் இடுப்பு அளவு தான் இருக்கும் என்பதால், இந்த பயிற்சியை மேறகொள்வதில் எந்த ஆபத்தும் இல்லை. 60 நிமிடம் இந்த பயிற்சியை செய்தாலே 350 கலோரி குறைந்துவிடும். இந்த பயிற்சியின் விசஷமே நேரம் போவதே தெரியாது. இதனால் வெளிநாட்டில் சேர்ந்தவர்கள், தங்களது நண்பர்களுடன் குழுவாக இந்த பயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.தொடர்புடைய நிகழ்ச்சிகள்

பயணங்கள் முடிவதில்லை - 07.10.2018

பயணங்கள் முடிவதில்லை - 07.10.2018

90 views

10.30 காட்சி - 23.09.2018

10.30 காட்சி - 23.09.2018

242 views

ரொக்கம் (07/09/2018)

ரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..

126 views

குரு

ஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..

76 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா (22.10.2018) - 246 ரன்கள் சேர்த்த கோலி, ரோஹித் ஜோடி

விளையாட்டு திருவிழா (22.10.2018) - மே.இ.தீவுகளை பந்தாடிய இந்திய அணி

0 views

விளையாட்டு திருவிழா (19.10.2018) - ஒருநாள் தொடரில் சாதிக்குமா மே.இ.தீவுகள் இந்தியாவுடன் பலப்பரீட்சை

இந்தியா,மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெறுகிறது.

56 views

விளையாட்டு திருவிழா (18.10.2018) - இளையோருக்கான ஒலிம்பிக் போட்டி

விளையாட்டு திருவிழா (18.10.2018) - இளையோருக்கான ஒலிம்பிக் தொடரில் கலப்பு இரட்டையருக்கான டைவிங் போட்டி நடைபெற்றது.

13 views

விளையாட்டு திருவிழா (17.10.2018) 48வது பிறந்தநாளை கொண்டாடும் கும்ப்ளே - ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்

விளையாட்டு திருவிழா (17.10.2018) 48வது பிறந்தநாளை கொண்டாடும் கும்ப்ளே - ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்

11 views

விளையாட்டு திருவிழா - (16.10.2018) : விராட் கோலியின் சாதனைக்கு வயது-5 இதே நாளில் அதிவேக சதம் விளாசிய கோலி

ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டரா? இந்திய அணியில் இடப்பிடித்த 2 ஆண்டுகள் நிறைவு

12 views

விளையாட்டு திருவிழா - (15.10.2018) அர்ஜென்டினா மோட்டார் சூப்பர் பைக்: தொடர்ந்து 10வது முறை ஜோனத்தன் வெற்றி

விளையாட்டு திருவிழா - (15.10.2018) அர்ஜென்டினா மோட்டார் சூப்பர் பைக்: தொடர்ந்து 10வது முறை ஜோனத்தன் வெற்றி

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.