இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு?

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று அல்லது நாளை பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
x
இலங்கை அதிபர் கோத்தபய அரசிற்கு எதிராக  அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவினை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண, ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு பிரிவினர் மற்றும் ஏனைய சில கட்சிகள் தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்த நிலையில், அவர் விரைவில் பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பின் போது நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் நெருக்கடி நிலை குறித்து விவாதித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்