இலங்கை எம்.பி. சரத் பொன்சேகா சர்ச்சை பேச்சு

மாவீரர் தின அனுசரிப்பை இலங்கை அரசு தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை எம்.பி. சரத் பொன்சேகா சர்ச்சை பேச்சு
x
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், 1980களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் 2,500 பேர் இருந்தார்கள் என்றும், அப்போது இலங்கைக்கு வந்த 75 ஆயிரம் இந்திய ராணுவத்தினரை குறைவான ஆட்களை வைத்து விடுதலை புலிகள் தோற்கடித்தார்கள் என தெரிவித்தார். இந்திய ராணுவத்தினரை வீழ்த்திய விடுதலை புலிகள், இலங்கையை சேர்ந்தவர்கள் எனக்கூறி பெருமை அடையலாம் என கூறினார்.

90களில் இலங்கை ராணுவத்தில் 70 ஆயிரம் வீரர்கள் இருந்த காரணத்தால்தான் யுத்தம் நீடித்தது எனக்கூறிய சரத் பொன்சேகா, 90 ஆயிரம் ராணுவத்தினர் இருந்திருந்தால், அன்றே யுத்தம் நிறைவு பெற்றிருக்கும் என தெரிவித்தார். சிறிய நாடாக இருந்தாலும், சிங்கப்பூரை போன்று இலங்கை ராணுவத்தில் ஆள் பலம், ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இலங்கையில் மாவீரர் நினைவு தினம் அனுசரிப்பதை கட்டாயம் தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்ட  சரத் பொன்சேகா, மாவீரர் தினம் அனுசரிக்கும் ஒரு நாட்டில் வாழ்வது சாபத்துக்குரியது என பாதுகாப்புச் செயலாளர் கண்ணீர் மல்கப் பேசியது தனக்கு நினைவில் வருவதாக குறிப்பிட்டார்.

யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது பிரச்சினையல்ல, ஆனால், பிரபாகரனின் பிறந்த நாளை தேர்வு செய்வதுதான் பிரச்சனை எனவும் தெரிவித்தார். அரசியல் நோக்கத்திற்காக வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் மாவீரர் நினைவு தின செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இவை தெற்கில் உள்ள மக்கள் மனங்களில் மீண்டும் கோபத்தை விதைக்கவே இவர்கள் முற்படுகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்