20 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் வைரஸ்

புதிய உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இதுவரை 20 நாடுகளில் கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
புதிய உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இதுவரை 20 நாடுகளில் கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் குறித்து இன்னும் முழுமையான தகவல் எதுவும் தெரியவராத நிலையில், புதிய வைரஸ் குறித்தான ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தென் ஆப்பிரிக்காவில் மட்டும் 70க்கும் மேற்பட்டோரிடம் ஒமிக்ரான தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளிலும் அடுத்தடுத்து ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் முதல் முறையாக பிரேசிலில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல், ஜப்பானிலும் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்