"சீனா முன்னெடுக்கும் எல்லைப் போர்" - பிரதமர் மோடியை சந்தித்த செனட்டர்கள்

இந்தியாவுடன் எல்லை போரில் சீனா ஈடுப்பட்டுள்ளதாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜான் கார்னின் கூறியுள்ளார்.
சீனா முன்னெடுக்கும் எல்லைப் போர் - பிரதமர் மோடியை சந்தித்த செனட்டர்கள்
x
இந்தியாவுடன் எல்லை போரில் சீனா ஈடுப்பட்டுள்ளதாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜான் கார்னின் கூறியுள்ளார். 

இந்தியா, பிலிப்பைனஸ் உள்ளிட்ட பல்வேறு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சமீபத்தில் பயணம் மேற்கொண்டது. இந்த  குழுவின் தலைவராக, குடியரசுக் கட்சியின் செனட் சபை உறுப்பினரான ஜான் கார்னின் செயல்பட்டார். சீனா, இந்தியாவுடன் எல்லை போரில் ஈடுப்பட்டுள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், அமெரிக்கா செனட் சபையில் உரையாற்றும் போது அவர் கூறியுள்ளார். சர்வதேச கடல் பகுதிகளில் கப்பல்கள் சுதந்திரமாக செல்வதற்கு சீனா அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறினார். சீனா, தனது சொந்த நாட்டினரான உய்குர் சிறுபான்மையினரின் மனித உரிமைகள நசுக்குவதாகவும், தைவான் மிது படை எடுக்கப் போவதாக அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தார். சீனாவின்
அச்சுறுத்தல்கள் பற்றி இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இதர அமைச்சர்களுடன் விவாதித்தாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்