ஏவுகணை மூலம் செயற்கைக்கோள்கள் சிதறடிப்பு : "ரஷ்யா செயலால் விண்வெளியில் குப்பைகள்" - ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம்

விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்களை ஏவுகணைகளை வீசி அழிக்கும் ரஷ்யாவின் செயலால், விண்வெளியில் இருக்கும் 7 விண்வெளி வீரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஏவுகணை மூலம் செயற்கைக்கோள்கள் சிதறடிப்பு : ரஷ்யா செயலால் விண்வெளியில் குப்பைகள் - ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம்
x
விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்களை ஏவுகணைகளை வீசி அழிக்கும் ரஷ்யாவின் செயலால், விண்வெளியில் இருக்கும் 7 விண்வெளி வீரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

தரையிலிருந்து 420 கிலோ மீட்டர் உயரத்தில் வானில் பறந்துகொண்டிருக்கிறது சர்வதேச விண்வெளி நிலையம். அப்பகுதியில் தகவல் தொழில்நுட்பம், வானிலை ஆய்வுக்கு என உலக நாடுகள் அனுப்பிய 7 ஆயிரத்து 500-க்கும் அதிகமான செயற்கைக்கோள்களும் சுற்றி வருகின்றன. 

செயற்கைக்கோள்கள் காலாவதியானாலும் அங்கேயே நிலைக்கொண்டு இருக்கும். இப்படி செயல்படாமல் இருக்கும் தங்கள் நாட்டு செயற்கைக்கோள்களை ஏவுகணைகளை வீசி தகர்க்கும் பணியை ரஷ்யா செய்து வருகிறது. 

மறுபுறம் ரஷ்யாவின் இந்த செயலால் விண்வெளி குப்பைகள் அதிகரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

 இந்த நிலையில் ரஷ்யா தற்போது தனது செயற்கைக்கோள்களை ஏவுகணைகளை வீசி சிதறடிக்க செய்ததில் உருவான குப்பைகள் விண்வெளி மையத்தில் சுற்றி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. 

ரஷ்யாவின் செயல் பொறுப்பற்றது என்றும் இதனால் பெரும் ஆபத்து நேரிடும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் (Ned Price )கண்டனம் தெரிவித்து உள்ளார். 

சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது 4 அமெரிக்கர்களும், ஒரு ஜெர்மன் விஞ்ஞானியும், 2 ரஷ்ய விஞ்ஞானிகளும் உள்ளனர். தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

விண்வெளியில் ஆயிரத்து 500க்கும் அதிகமான புலப்படும் குப்பைகளும், எண்ணற்ற சிறு குப்பைகளும்  மிதப்பதாக கூறியிருக்கும் அமெரிக்கா, இதனால் அனைத்து நாடுகளின் நலன்களுக்கும் எச்சரிக்கை எழுந்துள்ளது எனக் கூறியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்