கொரோனா சிகிச்சைக்கு மாத்திரை - உலகின் முதல் மாத்திரைக்கு அங்கீகாரம்

கொரோனா சிகிச்சைக்கான மாத்திரை ஒன்றுக்கு பிரிட்டன் அங்கீகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா சிகிச்சைக்கான முதல் மாத்திரை இது தான்.
கொரோனா சிகிச்சைக்கு மாத்திரை - உலகின் முதல் மாத்திரைக்கு அங்கீகாரம்
x
அமெரிக்காவின் மெர்க் அன்ட் கோ (Merck & Co) மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரப்படிக்ஸ் (Ridgeback Biotherapeutics) ஆகிய இரண்டு நிறுவனங்கள் கூட்டாக கொரோனா சிகிச்சைகான மாத்திரை ஒன்றை உருவாக்கியுள்ளன. மிதமான கொரோனா பாதிப்பிற்குள்ளான வயோதிகர்கள், நீரழிவு நோய், இதய நோய், உடல் பருமன் கொண்ட பிரிவினருக்கு இந்த மாத்திரை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட பின், ஐந்து நாட்களுக்கு தினமும் இரண்டு வேளைகள் இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸில் உள்ள என்ஸைம் ஒன்றை குறி வைத்து தாக்கும் இந்த மாத்திரை, கொரோனா வைரஸ் இரட்டிப்பாகி, மனித உடலில் உள்ள செல்களை கைபற்றும் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. கொரோனா தொற்றுதலுக்குள்ளானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளில், மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் விகிதத்தையும், மரணங்கள் ஏற்படும் விகிதத்தையும் இந்த மாத்திரை பாதியாக குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவை அமைப்பு மூலம் இந்த மாத்திரைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக பிரட்டனின் தடுப்பூசி அமைச்சர் மேகி த்ரோப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மருத்துவ வல்லுனர்கள் குழு இந்த மாத்திரைக்கு அங்கீகாரம் அளிப்பது பற்றிய இறுதி முடிவை, நவம்பர் 30இல் எடுக்க உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்