சீனா அணு ஆயுத சோதனை என தகவல் - ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர்சோனிக் சோதனை

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையை சீனா நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா அணு ஆயுத சோதனை என தகவல் - ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர்சோனிக் சோதனை
x
கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையை சீனா நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு ஆயுத பலத்தை நீருபிக்க வளர்ந்த, வளரும் நாடுகள் ரகசியமாக அணு அயுத சோதனையில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஹைப்பர்சோனிக் அதிநவீன வாகனத்தை சீனா பரிசோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்நாட்டு ராணுவம் சோதனை முயற்சியாக அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணை வாகனத்தை விண்ணில் ஏவியதாகவும், அது விண்ணில் பறந்தபடி பூமியை சுற்றி வந்து இலக்கை நோக்கி இறங்கியதாக கூறப்பட்டுள்ளது 

இருப்பினும் திட்டமிட்டமிடப்பட்டிருந்த இடத்தில் இருந்து இரண்டரை மைல் தூரம் விலகி தரையிறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகம் செல்லக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா அணு ஆயுத சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சர், அது ஏவுகணை அல்ல, விண்வெளி வாகனம் என குறிப்பிட்டார். இருப்பினும் சீனா அணு ஆயுத ஏவுகணை சோதனையையே  நடத்தியதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுபோன்று ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணை சோதனை நடத்தியதாக முதலில் அறிவித்த நாடு ரஷ்யா. 

2019ம் ஆண்டு நடந்த சோதனையில், மணிக்கு 33,000 கிலோ மீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக இலக்கை நோக்கி ஏவுகணையை செலுத்தியதாக கூறியது

கடந்த ஆண்டு அமெரிக்கா, ஒலியை விட 5 மடங்கு அல்லது மணிக்கு 6,174 கிலோ மீட்டர் வேகம் செல்லும் விதத்தில் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக கூறியது

தற்போது சீனாவும் இதே சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், இந்தியாவும் டிஆர்டிஓ மூலம் ஹைபர்சோனிக் சோதனையை வெற்றிகரமாக முடித்ததாகவும், இந்த ஏவுகணை 20 விநாடிகளில் 32.5 கிலோ மீட்டர் உயரம் பறக்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டது


இப்படி அடுத்தடுத்த நாடுகள் அணு ஆயுத சோதனை மேற்கொள்வதால், உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடுமோ என அச்சம் கொள்ள வைக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்