மன அழுத்தமா.. கவலை வேண்டாம்.."சோகமா இருந்தா ரூம் போட்டு அழலாம்" - ஸ்பெயினில் மன இறுக்கம் போக்க புது முயற்சி

மன அழுத்தத்தில் சிக்கித் தவிப்பவர்களுகளின் பாரத்தைக் குறைக்க ஸ்பெயின் நாட்டில் "க்ரையிங் ரூம்" என்ற அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன அழுத்தமா.. கவலை வேண்டாம்..சோகமா இருந்தா ரூம் போட்டு அழலாம் - ஸ்பெயினில் மன இறுக்கம் போக்க புது முயற்சி
x
மன அழுத்தத்தில் சிக்கித் தவிப்பவர்களுகளின் பாரத்தைக் குறைக்க ஸ்பெயின் நாட்டில் "க்ரையிங் ரூம்" என்ற அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மாட்ரிட் பகுதியில், உருவாக்கப்பட்டுள்ள இந்த "க்ரையிங் ரூமுக்குச்" செல்ல கூட்டம் அலைமோதுகிறது. உள்ளே இருக்கும் தொலைபேசியில் உளவியளாளர்கள் உட்பட உங்களுக்குப் பிடித்தவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் அழைத்து, கஷ்டம் கரையும் வரையிலும் நீங்கள் கதறிக்கதறி அழலாம்...மாறி வரும் வாழ்க்கை முறையால் அவதிப்படும் மக்களின் மன இறுக்கத்தைப் போக்க இந்த புதிய வழி கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. சோகமாக இருந்தால் இனி ரூம் போட்டு அழுகலாம் என்று க்ரையிங் ரூமுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்