பாரிஸில் நடந்த ஸ்கேட்போர்டு சாம்பியன்ஷிப் போட்டி - ஈபிள் டவர் அருகே மக்கள் ஆரவாரம்

பாரிஸில் நடந்த ஸ்கேட்போர்டு சாம்பியன்ஷிப் போட்டி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாரிஸில் நடந்த ஸ்கேட்போர்டு சாம்பியன்ஷிப் போட்டி - ஈபிள் டவர் அருகே மக்கள் ஆரவாரம்
x
பாரிஸில் நடந்த ஸ்கேட்போர்டு சாம்பியன்ஷிப் போட்டி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். உலக அதிசயங்களுள் ஒன்றான ஈபிள் டவர் அருகே நடந்தப்பட்ட ஸ்கேட்போர்டு சாம்பியன்ஷிப் போட்டியில், 
உலகளவில் பிரபலமான கால்பந்து வீரர் ஒருவர் கலந்து கொண்டு, வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்ததாக உலக அளவில் கால்பந்து விளையாட்டில் அசத்தும் பிரேசில் நாயகன், நெய்மர்... சர்வதேச நட்சத்திரமான இவர், தற்போது பிஎஸ்ஜி கால்பந்து அணியில் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாட உள்ளார். இந்நிலையில், பிரான்ஸில் நடந்த ஸ்கேட்போர்டு சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு, தனது நாட்டை சேர்ந்த பிரபல ஸ்கேட்போர்டு வீராங்கனையும், தனது நெருங்கிய தோழியுமான லெடிசியாவை மக்களோடு மக்களாக சேர்ந்து ஊக்குவித்துள்ளார், நெய்மர். இந்த காட்சிகள் கால்பந்து ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், இந்த போட்டியில் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார், லெடிசியா..இந்த ஆண்டு முதல், ஸ்கேட்போர்டு போட்டி ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது சுமார் மூவாயிரத்து 500 பார்வையாளர்களுக்கு மத்தியில் லாவகமாக வீரர்கள் ஸ்கேட் போர்டில் அசத்தியது  ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 



Next Story

மேலும் செய்திகள்