ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் - உறுப்பினராக இந்தியா தேர்வு

ஐ.நா சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
x
ஐ.நா சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சமூக, பொருளாதாரம் மற்றும சுற்றுச்சூழல் ஆகிய மூன்று பரிமாணங்களில் நீடிக்கத்த்தக்க வளர்ச்சியை மேம்படுத்த ஐ.நா சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் வகை செய்கிறது.

ஐ.நாவின் கீழ் உள்ள 15 சிறப்பு அமைப்புகளையும், எட்டு செயல்முறை ஆணையங்களையும், ஐந்து பிராந்திய ஆணையங்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளை இந்த கவுன்சில் மேற்கொள்கிறது.

54 உறுப்பினர்களுடன், சுமார் 1,600 தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த கவுன்சிலுடன் இணைந்து பல்வேறு ஐ.நா பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஐ.நா சபையின் சார்பில் நடைபெறும் உச்சி மாநாடுகள் மற்றும் இதர மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை செயல்படுத்துவதில் இந்த கவுன்சில் முக்கிய பங்காற்றுகிறது.


54 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில், 2022 முதல் 2024 வரையில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த கவுன்சிலுக்கு இந்தியாவை தேர்வு செய்த ஐ.நா சபையின் உறுப்பினர் நாடுகளுக்கு, ஐ.நாவிற்கான இந்திய தூத டி.எஸ்.திருமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். 

இந்தியாவுடன், எஸ்ட்வானி, மொரிசியஸ், டுனிஷியா, டான்சானியா, குரோசியா, செக் குடியரசு, பெலிசி, சீலே மற்றும் பெரு ஆகிய நாடுகளும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்