சைபர் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு - அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் எச்சரிக்கை

அமெரிக்காவின் பெரும் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இதன் பின்னணி பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
சைபர் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு - அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் எச்சரிக்கை
x
அமெரிக்காவின் பெரும் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இதன் பின்னணி பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

உலகின் மிகப் பெரிய இறைச்சி உற்பத்தி நிறுவனமான ஜே.பி.எஸ் நிறுவனத்தின் மீது அண்மையில் நடத்தப்பட்ட இணைய வழி சைபர் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முன்னதாக மே மாதத்தில் குழாய் மூலம் பெட்ரோல் விநியோகிக்கும் கலோனியல் பைப்லைன் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

 இந்த சூழலில் கலோனியல் பைப்லைன் மற்றும் ஜே.டி.எஸ் நிறுவனங்கள் ஹாக்கர்களுக்கு பெரும் தொகையை பிணைத் தொகையாக அளித்து, நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த தாக்குதலை ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் நடத்தியிருக்கலாம் என அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. 

சைபர் தாக்குதல்களால் பல நிறுவன அதிபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள சூழலில், இதுபோன்று பல முன்னணி நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார் அமெரிக்காவின் வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரெய்மொண்டொ

இதனால் பெரு நிறுவனங்கள் சைபர் பாதுகாப்பை அதிகரித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜினா அறிவுறுத்தியுள்ளார். 

இதனிடையே தனியார் துறையில் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்து வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேவைப்பட்டால் ஹேக்கர்களுக்கு எதிர் தாக்குதல்கள் நடத்தி பதிலடி கொடுக்கவும் அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்