களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை : கொரோனாவுக்கு மத்தியிலும் கொண்டாட்டம்

நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது.
களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை : கொரோனாவுக்கு மத்தியிலும் கொண்டாட்டம்
x
நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது. இதையொட்டி, பாரிஸ் நகர வீதிகள், வண்ண விளக்குகளால், அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது. வீதிகளில் கூடி, இவற்றைப் பார்த்து ரசித்த மக்கள், கொரோனாவுக்கு மத்தியிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகி வருவதாக தெரிவித்தனர்.

களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை: கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கொரில்லா குரங்குகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் களைகட்டிவரும் நிலையில், லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள கொரில்லா குரங்குகளும், கொண்டாட்டத்தில் ஈடுபட்டன. இதையொட்டி, பூங்காவில், பரிசுப் பொருட்கள்போல் மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை, கொரில்லா குரங்குகள் உற்சாகமாக உண்டு மகிழ்ந்தன.

பனி கால திருவிழா பணிகள் மும்முரம்: 10,000 ஐஸ் கட்டிகளால் உருவான மாளிகை

சீனாவில் பனிக் கால பண்டிகையை முன்னிட்டு ராட்சத ஐஸ் மாளிகையை ஊழியர்கள் உருவாக்கி வருகின்றனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் பிரபல பனிக் கால திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இணைந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஐஸ் கட்டிகளை கொண்டு ஐஸ் மாளிகையை கட்டி வருகின்றனர். இதில் ஹர்பின் நகரத்தில் ஓடும் ஆற்றில் உள்ள ஐஸ்கட்டிளை கொண்டு ஊழியர்கள் ஐஸ் மாளிகை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.       

 



Next Story

மேலும் செய்திகள்