கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்படும் விவகாரம் - நேரடியாக பதில் அளிக்க டிரம்ப் மறுப்பு

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்படும் விவகாரத்தில் நேரடியாக பதிலளிப்பதை டொனால்டு டிரம்ப் தவிர்த்துவிட்டார்.
கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்படும் விவகாரம் - நேரடியாக பதில் அளிக்க டிரம்ப் மறுப்பு
x
அமெரிக்காவில் 1973-ம் ஆண்டுக்கு முன்பு பெண்கள் கருவை கலைப்பது சட்டவிரோதமாக பார்க்கப்பட்டது. இதற்கு எதிராக பெண்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக உச்சநீதிமன்றம் கருக்கலைப்பை சட்டப் பூர்வமாக்கியது. ஆனால், டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் மாற்றம் தோன்றியது. 2016 தேர்தல் பிரசாரத்தின் போதே டிரம்ப், கருவை கலைக்கும் பெண்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார். டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் குடியரசு கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்புக்கு கடுமையான கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. தற்போதைய தேர்தலில் இவ்விவகாரமும் முக்கிய பிரச்சினையாக எழுந்திருக்கிறது. இந்நிலையில், மியாமியில் நடைபெற்ற டவுன்ஹால் நிகழ்ச்சியில் கருகலைப்பு விவகாரம் தொடர்பாக டிரம்ப் நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்துவிட்டார். அவர் பேசுகையில், நான் நியமித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என்று மட்டும் பேசியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்