பிரிட்டனை அச்சுறுத்தும் கொரோனா 2வது அலை - 6 மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

பிரிட்டனில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாக பரவி வருவதால் 6 மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனை அச்சுறுத்தும் கொரோனா 2வது அலை - 6 மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
x
ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டனில் தான் கொரோனா தொற்றுக்கு அதிகபட்சமாக 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது அங்கு கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது.  உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிரிழப்பு அதிகரிக்கும் என விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எச்சரித்த நிலையில், புதிய கட்டுப்பாடுகள் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். முடிந்தவரை அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், ஓட்டல், பார்களை இரவு 10 மணியுடன் மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். கொரோனா தாக்கம் குறையாவிட்டால் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும் போரிஸ் ஜான்சன்  கூறியுள்ளார்.
விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அவர், எனினும் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்