பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது எப்படி?

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது எப்படி என்பது பற்றி தற்போது பார்ப்போம்.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது எப்படி?
x
சிம்பன்சி குரங்குகளுக்கு சளியை உருவாக்கும்,  வைரஸை மரபணு மாற்றம் செய்து இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி, கொரோனா வைரசின் மரபணுத் தொடரில் உள்ள முள் போன்ற, ஸ்பைக் புரதத்துக்கான குறியீடுகளைப் பிரித்தெடுத்து அதனை இந்த தடுப்பு மருந்தின் மரபணுவுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர்.

இதனால், இந்த தடுப்பூசியில் உள்ள மரபணு மாற்றப்பட்ட வைரஸ் பார்ப்பதற்கு கொரோனா வைரஸ் போலவே தோற்றம் அளிக்கும்.

இப்படி கொரோனா போலவே மாறுவேடம் பூண்ட மரபணு மாற்றப்பட்ட வைரஸ், மனித உடலுக்குள் செலுத்தப்படும் போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் அடையாளம் கண்டு கொரோனா வைரசோடு போரிட பயிற்சி எடுத்துக் கொள்ளும்.  பின்னர், உண்மையான கொரோனா வைரஸ் எப்போதாவது உடலுக்குள் நுழையும் போது, அதனை உடனடியாக அடையாளம் காணவும், எதிர்த்துப் போராடவும்,  உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்குப் போதிய பயிற்சி இருக்கும் என்பதால், கொரோனா வைரஸால் உடலில் தொற்றாக மாற முடியாது. இது தான் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் வடிவமைப்பு உத்தியாகும்.  

Next Story

மேலும் செய்திகள்