"தென் சீனக் கடலை தன் கடல் சாம்ராஜ்யமாக கருத சீனாவை உலக நாடுகள் அனுமதிக்காது" - அமெரிக்கா

தென் சீனக் கடலை தன் கடல் சாம்ராஜ்யமாக கருத பெய்ஜிங்கை உலகம் அனுமதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
தென் சீனக் கடலை தன் கடல் சாம்ராஜ்யமாக கருத சீனாவை உலக நாடுகள் அனுமதிக்காது - அமெரிக்கா
x
தென் சீனக் கடலை தன் கடல் சாம்ராஜ்யமாக கருத பெய்ஜிங்கை உலகம் அனுமதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். தென் சீனக் கடல் பகுதியில் யாருக்கு உரிமை உள்ளது என்ற ​பிரச்சனை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இயற்கை வளங்களுக்கு சொந்தம் கொண்டாட முயற்சிப்பதும், சம்மந்தப்பட்ட நாடுகளை மிரட்டிப் பணிய வைக்க முயற்சிப்பதும் சர்வதேச சட்டத்தின் படி சட்ட விரோதமானது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பான கொள்கையை அமெரிக்கா பலப்படுத்தும் எனவும் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். சீனா செயற்கையாக ​தீவுகளை உருவாக்கி ராணுவ தளங்களை உருவாக்கி வருவதாக மலேஷியா, தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

போர்க்கப்பலில் திடீர் தீ விபத்து - 21 பேர் படுகாயம்


அமெரிக்காவின் சான்டியாகோ கடற்படை தளத்தில், போர்க்கப்பலில் திடீர் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தினால், கப்பலில் இருந்து கரும்புகை வெளியேறி பல இடங்களுக்கும் பரவியது. விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தபட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் காயமடைந்த 21 பேருக்கு,  தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆளுநர் விளக்கம்


அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசான்டிஸ், பரவி வரும் கொரோனா தொற்று குறித்து, விளக்கம் அளித்து கொண்டிருந்தார். 
அப்போது, செய்தியாளர் சந்திப்பின் போது, ஒரு நபர், கொரோனா வைரஸ் அதிகளவு பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாததற்கு, வெட்கப்பட வேண்டும் என, கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அவசர அவசரமாக வெளியேற்றினர்.

Next Story

மேலும் செய்திகள்