கொரோனா பரவலால் ஹெச்.ஐ.வி. சிகிச்சை பாதிப்பு - ஐ.நா. அறிக்கையில் தகவல்

கொரோனா தொற்று பரவாலால் ஹெச்.ஐ.வி. சிகிச்சை பாதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலால் ஹெச்.ஐ.வி. சிகிச்சை பாதிப்பு - ஐ.நா. அறிக்கையில் தகவல்
x
கொரோனா தொற்று பரவாலால் ஹெச்.ஐ.வி. சிகிச்சை பாதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 17 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதி வரை உலகில், 3 கோடியே 80 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. இதில் 71 லட்சம் பேருக்கு தாங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதை தெரியாமல் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. ஹெச்.ஐ.வி. பாதித்து 2019 ஆம் ஆண்டு மட்டும் ஆறு லட்சத்து 90 ஆயிரம் பேர் உயி​ரிழந்துள்ள நிலையில்,  ஒரு கோடியே 26 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க 2 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆனால் 30 சதவீதம் அளவுக்கு இந்த சிகிச்சை திட்டத்தை மேற்கொள்ள நிதிப் பற்றாக்குறை உள்ளதும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்