கலிஃபோர்னியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - நேற்று மட்டும் 7,149 பேருக்கு தொற்று உறுதி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நேற்று மட்டும் புதிதாக 7 ஆயிரத்து 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கலிஃபோர்னியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - நேற்று மட்டும் 7,149 பேருக்கு தொற்று உறுதி
x
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நேற்று மட்டும் புதிதாக 7 ஆயிரத்து 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து  90 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 29 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள 30 சதவீத படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மற்ற மாகாணங்களிலும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், முக கவசம் உள்ளிட்ட நடைமுறைகளை கடைபிடிக்காத கிராமப்புற பகுதிகளுக்கு நிதியுதவி  கிடைக்காது என அம்மாகாண ஆளுநர் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்