எச்.ஐ.வி.யில் இருந்து மீண்ட உலகின் முதல் மனிதர் - புற்றுநோய் காரணமாக காலமானார்

கடந்த 1966 ஆம் ஆண்டு பிறந்த பிரவுன், எச்.ஐ.வி. வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், 2007 ஆம் ஆண்டு அவர் குணப்படுத்தப்பட்டார்.
எச்.ஐ.வி.யில் இருந்து மீண்ட உலகின் முதல் மனிதர் - புற்றுநோய் காரணமாக காலமானார்
Published on

கடந்த 1966 ஆம் ஆண்டு பிறந்த பிரவுன், எச்.ஐ.வி. வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், 2007 ஆம் ஆண்டு அவர் குணப்படுத்தப்பட்டார். அவருக்கு பெர்லின் நோயாளி என்ற பெயரும் உண்டு.1995 -ல் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிரவுனுக்கு, 2006 - ல் புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு அதற்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திமோத்தி ரேய் பிரவுனுக்கு பிரத்யோக எலும்பு மஜ்ஜை மூலம் எச்.ஐ.வி. பாதிப்பில் இருந்து மீள சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் உயிர்பிரிந்ததாக அவரது மனைவி

டிம் ஹோஃப்கென் தெரிவித்துள்ளார். 1980-களில் எயிட்ஸ் பாதித்து மூன்றரை கோடி பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவ துறை மேம்பாடு காரணமாக பலர் தற்போது உயிரோடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com