15 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மூட்டம்.. வெடித்து சிதறிய பட்டாசு கிடங்கு.. வெளியான அதிர்ச்சி காட்சி

x

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், பட்டாசு கிடங்கு ஒன்று பயங்கரமாக வெடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. எஸ்பார்டோ (Esparto) என்ற பகுதியில் பட்டாசு சேமித்து வைக்கும் கிடங்கு செயல்பட்டு வந்த‌து. இங்கு, திடீரென தீ விபத்து ஏற்பட்டு, பயங்கரமாக வெடித்து சிதறியது. கிடங்கில் இருந்த பட்டாசுகள் வெடித்து நாலாபுறமும் சிதறின. 15 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மூட்டம் எழுந்த‌து. 80 ஏக்கர் பரப்பளவில் இருந்த கிடங்கு முற்றிலும் சேத‌மடைந்த நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த 7 பேரை தேடி வருகின்றனர். இந்த விபத்தின் தாக்கத்தால், ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்