நாசா வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

நாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
நாசா வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
x
அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் தனியார் ராக்கெட் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். அதன் மூலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய 2 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதிக அனுபவம் கொண்டவர்கள் அவர்கள் என்பதால் தேர்வு செய்யப்பட்டனர்.  அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் செண்டர் காம்பளக்ஸ் 39 ஏ-ல் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் கடந்த 28ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அவர்கள் செல்ல இருந்தனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு நாசா வீரர்களை அனுப்பும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மே 30-ஆம் தேதி அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி,  நாசா விண்வெளி வீரர்கள்  பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவரை ஏற்றிக்கொண்டு ராக்கெட் சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்